திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை
திமுக தலைவர்களின் சொத்து மதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஏப் 14) வெளியிட்டார். திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் முக.ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களுடைய சொத்து மதிப்புகள் வெளியிடப்பட்டது. திமுக தலைவர்களின் ஊழல் விவரங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு ஷெல் நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றார் என்றும் அண்ணாமலை கூறி இருக்கிறார். இன்று தமிழக பாஜக கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக அண்ணாமலை இந்த தகவல்களை வெளியிட்டார். இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் வரும் 21ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பான கேள்விகளுக்கு ஏப்ரல் 21ஆம் தேதி அன்று அவர் பதிலளிப்பார்.
பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து மதிப்புகள்
அமைச்சர் கே.என்.நேரு- 2,495.14 கோடி ரூபாய் அமைச்சர் எ.வ.வேலு- 5,442.39 கோடி ரூபாய் சன் டிவியின் கலாநிதிமாறன்- 12,450 கோடி ரூபாய் திமுக எம்பி கனிமொழி- ரூ.830.33 கோடி பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி- 581.20 கோடி ரூபாய் டிஆர் பாலு- 10,841.10 கோடி ரூபாய் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி- 1,023.22 கோடி ரூபாய் திமுகவின் மொத்த சொத்து மதிப்பு- 1,408.94 கோடி ரூபாய் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்- 902.46 கோடி ரூபாய் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்- 2,039 கோடி ரூபாய் திமுக தலைவர்களிடம் மொத்தமாக இருப்பது- ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல்(ரூ.1,343,170,000,000) ஆல்ஸ்டாம் கம்பெனி என்ற நிறுவனத்திடம் இருந்து ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சமாக பெற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.