Page Loader
மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது 

மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது 

எழுதியவர் Sindhuja SM
Mar 24, 2024
05:02 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறிய சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ பார்மா நிறுவனம் பாஜகவுக்கு நிறைய நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது அரபிந்தோ பார்மா நிறுவனம் வாங்கிய ரூ.52 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களில் பாஜக பெரும் பங்கைப் பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 2022இல் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு அதற்கு அடுத்த ஆண்டு அப்ரூவராக மாறிய சரத் சந்திர ரெட்டியின் அரபிந்தோ பார்மா நிறுவனம் இந்த பத்திரங்களை வாங்கியுள்ளது. இதே வழக்கில் தான் தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யட்டுள்ளார். ஏப்ரல் 2021 முதல் நவம்பர் 2023க்கு இடையிலான காலகட்டத்தில், அரபிந்தோ பார்மா ரூ.52 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.

டெல்லி 

சரத் ரெட்டி கைது செய்யப்பட்டவுடன் ரூ.5 கோடியை பெற்ற பாஜக 

இந்த பத்திரங்களில் 66 சதவீதம் பாஜகவுக்கு அனுப்பப்பட்டதாகவும், 29 சதவீதம் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்)கட்சிக்கு அனுப்பப்பட்டதாகவும், எஞ்சிய தொகை தெலுங்கு தேசம் கட்சிக்கு(டிடிபி) அனுப்பப்பட்டதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன. 2022-ல் சரத் ரெட்டி கைது செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு அரபிந்தோ பார்மா நிறுவனம் ரூ.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. நவம்பர் 10, 2022-ல் சரத் ரெட்டி கைது செய்யப்பட்டார். ரூ.5 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரபிந்தோ பார்மா நிறுவனம் நவம்பர் 15, 2022-ல் வாங்கி இருக்கிறது. அப்படி அரபிந்தோ பார்மா நன்கொடையாக அளித்த ரூ.5 கோடி மதிப்பிலான பத்திரங்களை நவம்பர் 21, 2022 அன்று பாஜக மீட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.