கேரளாவில் இறுதியாக தாமரை மலர்ந்தது! முதல் பாஜக MP ஆக ஆனார் நடிகர் சுரேஷ் கோபி
மக்களவைத் தேர்தலில், பிரபல மலையாள நடிகரும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின்படி, கேரளாவின் திருச்சூரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.எஸ் சுனில் குமாருக்கு எதிராக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். பிஜேபிக்கு, இந்த வெற்றி முக்கியமானதாக இருக்கும். காரணம், இதுவரை கேரளாவில் லோக்சபா தொகுதியை பாஜக கைப்பற்றுவது இதுவே முதல் முறை.
கோபியின் அரசியல் பயணம் மற்றும் முந்தைய தேர்தல் செயல்பாடு
சுரேஷ் கோபியின் அரசியல் வாழ்க்கை ஏப்ரல் 2016 இல் குடியரசுத் தலைவரால், ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேர்ந்தார். அவரது பதவிக்காலத்தில் பல்வேறு கட்சியின் குழுக்களில் பணியாற்றினார். 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், சுரேஷ் கோபி கேரளாவில் பாஜகவின் வாக்குப் பங்கை 11.1% லிருந்து 28.2% ஆக உயர்த்த உதவினார். திருச்சூர் தொகுதியில் அவர் போட்டியிடுவது இது இரண்டாவது முறையாகும்.
திருச்சூர் தொகுதி: வாக்காளர் தளத்தை பற்றி ஒரு பார்வை
மத்திய கேரளாவில் அமைந்துள்ள திருச்சூர், சுமார் 45% வாக்குகளுடன் இந்து சமூகத்தால் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ வாக்காளர் தளத்தை சுமார் 30-35% என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து 72.9% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் திருச்சூர் மக்களவைத் தேர்தலின் இறுதி முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது.