பீகாரில் குடிகார கணவனை விட்டுவிட்டு கடன் வசூலிக்க வந்தவருடன் ஜூட் விட்ட மனைவி
செய்தி முன்னோட்டம்
ஒரு வியத்தகு திருப்பமாக, பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தனது கணவரை விட்டுவிட்டு, கடனைத் வசூலிக்க வந்தவருடன் திருமணம் செய்துகொண்டார்.
2022 இல் நகுல் ஷர்மாவை மணந்த இந்திரா குமாரி, குடிப்பழக்கத்தால் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்.
இதனால் துன்பப்பட்டு வந்த அவர், தனது வீட்டிற்கு தவறாமல் சென்று வந்த கடன் மீட்பு முகவரான பவன் குமார் யாதவுடன் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொண்டார்.
அவர்களின் தொழில் தொடர்புகள் படிப்படியாக நட்பாகவும் பின்னர் காதலாகவும் மாறியது.
ஐந்து மாதங்கள் இந்திரா குமாரையும் பவன் குமார் யாதவும் தங்கள் உறவை ரகசியமாக வைத்திருந்தனர்.
திருமணம்
பவன் குமார் யாதவுடன் திருமணம்
பிப்ரவரி 4 அன்று, அவர்கள் ஜமுய்க்குத் திரும்புவதற்கு முன், மேற்கு வங்காளத்தின் அசன்சோலுக்கு தப்பிச் சென்றனர்.
அங்கு அவர்கள் பிப்ரவரி 11 அன்று ஒரு கோவிலில் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் வீடியோ ஒன்று வேகமாக பரவியது.
பவன் குடும்பத்தினர் திருமணத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், இந்திராவின் குடும்பத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், இந்திராவின் முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்று கூறினார். சட்ட சிக்கல்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், மனம் முடித்த இருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த போலீஸ் பாதுகாப்பை நாடியுள்ளனர்.
இருவரும் பாதுகாப்பில் இருக்கும் நிலையில் அதிகாரிகள் இப்போது இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனர்.