Loading...
பீகாரில் மீண்டும் ஒரு பாலியல் அத்துமீறல்: அதிர்ச்சி வீடியோ வைரலானதைத் தொடர்ந்து 4 பேர் கைது
பீகாரில் மீண்டும் ஒரு பாலியல் அத்துமீறல்

பீகாரில் மீண்டும் ஒரு பாலியல் அத்துமீறல்: அதிர்ச்சி வீடியோ வைரலானதைத் தொடர்ந்து 4 பேர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Sep 24, 2026
01:50 pm

செய்தி முன்னோட்டம்

பீகார் மாநிலத்தில், இளம் பெண் ஒருவரை வழிமறித்து இளைஞர்கள் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமஸ்திபூர் மாவட்டம், கர்பூரிகிராம் காவல் எல்லைக்குட்பட்ட ஜகத்சிங்பூர் கிராமத்தின் பைபாஸ் சாலையில், தனது நண்பருடன் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் புகைப்படம் எடுப்பதற்காக நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர், அவர்களை சூழ்ந்து கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். சிறுமி தப்பிக்க முயலும் போது, ஒரு இளைஞர் அவரது கையைப் பிடித்து இழுப்பதும், மற்றொருவன் அடிக்க முயல்வதும் பதிவாகியுள்ளது. தான் தனது சகோதரனை அழைப்பதாகக் கூறி, அச்சிறுமி கண்ணீருடன் கைக்கூப்பிக் கெஞ்சுவதும் அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

கைது

வீடியோவை ஆதாரமாக கொண்டு கைது நடவடிக்கை

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வீடியோவில் தொடர்புடைய 4 இளைஞர்களையும் அவர்களின் வீடுகளிலேயே வைத்து வியாழக்கிழமை கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன்புதான் பீகாரின் ஜமுய் பகுதியில் பயிற்சி வகுப்பு முடித்து திரும்பிய பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் அவரது ஆண் நண்பரை வழிமறித்து, ஒரு கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது.

அந்தச் சம்பவத்திலும் வீடியோ வெளியானதை தொடர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT