பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் சுங்கக் கட்டணம் 22 சதவீதம் உயர்வு
செய்தி முன்னோட்டம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI), பெங்களூர்-மைசூர் விரைவுச் சாலையின் சுங்கக் கட்டணத்தை 22 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இந்த கட்டண உயர்வு ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதற்கு இணையவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கார்கள்/ஜீப்கள்/வேன்களில் ஒருமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.135ல் இருந்து ரூ.165ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இருவழி பயணத்திற்கான சுங்க கட்டணம் ரூ.205ல் இருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல், பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஒருமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.460ல் இருந்து ரூ.565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பேருந்துகள் மற்றும் லாரிகள் வந்துவிட்டு திரும்புவதற்கான சுங்க கட்டணம் ரூ.690ல் இருந்து ரூ.850 ஆக உயர்ந்துள்ளது.
தப்பிவிடப்
இந்த சுங்க கட்டண உயர்வை பலரும் விமரித்து வருகின்றனர்
பெங்களூர் - மைசூர் விரைவுச்சாலையின் இரண்டாவது பாதை திறக்கப்பட்ட பிறகு, சுங்க கட்டணம் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
118 கிமீ நீளம் கொண்ட பெங்களூர்- மைசூர் விரைவுச் சாலை ரூ.8,408 கோடி செலவில் கட்டப்பட்டு, மார்ச் 12ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த விரைவுச்சாலை பெங்களூர் மற்றும் மைசூர் இடையேயான பயண நேரத்தை 3.5 மணிநேரத்தில் இருந்து சுமார் ஒன்றரை மணிநேரமாக குறைத்தது.
இந்த சுங்க கட்டண உயர்வை பலரும் விமரித்து வருகின்றனர்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ட்விட்டர்வாசியான பிரசன்னா பிஎன், "பெங்களூரு மைசூர் விரைவுச்சாலையின் கட்டணத்தை ஒரு காலாண்டிற்குள் ஏன் உயர்த்துகிறார்கள்! இது எப்படி சாத்தியப்படும்?" என்று கூறியுள்ளார்.