பெங்களூரு கட்டிட விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, கட்டிட உரிமையாளர் கைது
செய்தி முன்னோட்டம்
பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்றும் பலர் இடிபாடுகளிடேயே சிக்கி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
கடந்த வாரம் முதல் பெங்களுரு நகரத்தில் பெய்து வரும் கனமழையால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இடிபாடுகளில் இருந்து 13 மீட்கப்பட்ட நிலையில், தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த முயற்சிகளில் இரண்டு தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மீட்பு வேன்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் கட்டிடத்தின் உரிமையாளர் முனிராஜு ரெட்டியை, அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
காரணம்
கட்டிடம் இடிந்து விழக் காரணம்: மழை அல்ல, தரமில்லாத கட்டுமான பொருட்கள்
சரிவுக்கான காரணம் மழையல்ல, தரமற்ற பொருட்கள் மற்றும் மோசமான கட்டுமானம் என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கின்றது.
கட்டிடத்தில் நான்கு தளங்களுக்கு மட்டுமே அனுமதி இருந்ததாகவும், கட்டுமான விதிமீறல்கள் நடந்ததாகவும், 7 மாடி கட்டப்பட்டதாகவும் ஆதாரங்கள் சுட்டிக்காட்டின.
ஆதாரங்களின்படி, கட்டிடத்திற்கான தூண் தண்டுகள் 28-30 மிமீ தடிமனாக இருக்க வேண்டும், ஆனால் பயன்படுத்தப்பட்டவை 18-20 மிமீ தடிமன் மட்டுமே.
மோல்டிங் போன்ற மற்ற பகுதிகளில், 14-16 மிமீ தடிமன் கொண்ட தண்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும், ஆனால், பயன்படுத்தப்பட்ட தண்டுகள் 8-10 மிமீ தடிமன் மட்டுமே.
அதேபோல தேவையான அளவை விட குறைவான சிமென்ட் மற்றும் அதிக மணல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
CCTV காட்சிகள்
பெங்களூருவில் கனமழையால் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் இடிந்து விழுந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சி
— DailyThanthi (@dinathanthi) October 23, 2024
#BuildingCollapse #banglore #CCTV #Dailythanthi pic.twitter.com/7rKuznofFg