Page Loader
மகனைக் கொல்வதற்கு முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பிய சுசனா சேத்
மகனைக் கொல்வதற்கு முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பிய சுசனா சேத்

மகனைக் கொல்வதற்கு முன் கணவருக்கு மெசேஜ் அனுப்பிய சுசனா சேத்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 11, 2024
06:03 pm

செய்தி முன்னோட்டம்

கோவாவில் தனது 4 வயது குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூருவை சேர்ந்த AI நிறுவன தலைமை செயல் அதிகாரி சுசனா சேத், ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூருவில் மகனை சந்திக்கலாம் என்று தனது பிரிந்த கணவர் வெங்கட்ராமனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ்-இல் வெளியான செய்தியின் படி, கோவாவில் சுசனா சேத்தின் முன்பதிவு ஜனவரி 6 முதல் ஜனவரி 10 வரை இருந்ததால், தந்தையையும்-மகனையும் சந்திக்க வைக்கும் திட்டம் சுசனாவுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் மாஜி கணவர் வெங்கட்ராமனை அலைக்கழிக்கவே அவர் அந்த செய்தியை அனுப்பியிருக்க கூடும் என கூறப்படுகிறது.

card 2

சுசனாவை தொடர்புகொள்ள முயற்சித்த வெங்கட்ராமன்

இருப்பினும், சூசனாவிடம் இருந்து அந்த மெசேஜ் கிடைத்தபோது, வெங்கட்ராமன் பெங்களுருவில் தான் இருந்துள்ளார். மகனை சந்திக்கும் ஆசையில், சூசனா குறிப்பிட்ட இடத்திற்கு சென்று இரண்டு மணிநேரம் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. காத்திருந்து பொறுமையிழந்த வெங்கட்ராமன், சுசனாவுக்கு போன் செய்தும் மெசேஜ் செய்தும் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்றதும் அவர் அலுவலக வேலைக்காக ஜகார்த்தா புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், சுசனா தனது மகனுக்கு அதிக அளவு இருமல் மருந்தைக் கொடுத்த பிறகு, தலையணையால் அவரை மூச்சுத் திணறடித்து கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. பிரிந்த கணவரின் முகத்தை மகன் நினைவூட்டியதாக சுசனா தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.