மகனின் கொலை தொடர்பாக, பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத்-ஐ சந்தித்த கணவர் வெங்கட்ராமன்
பெற்ற மகனை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த மைண்ட்ஃபுல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சுசனா சேத், நேற்று தனது கணவர் வெங்கட்ராமனை சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, கோவா காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்துள்ளது. விவாகரத்து கோரியுள்ள இந்த தம்பதி, சந்திப்பின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. வெங்கட்ராமன், சுசானாவிடம் குழந்தையை எதற்காக கொன்றார் என கேள்வி எழுப்பியுள்ளார். சுசானாவோ, தனக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இல்லை என மறுத்ததாக கூறப்படுகிறது. குழந்தை உறங்கியபின், தானும் உறங்கிவிட்டதாகவும், எழுந்து பார்த்தபோது, குழந்தை இறந்து கிடந்தது எனவும் அவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவா போலீஸ் முன் வெங்கட் ராமன் வாக்குமூலம்
கோவா காவல்துறையினர் வெங்கட்ராமன் வாக்குமூலம் அளித்த பின்னர், இவர்கள் இருவரின் சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. வெங்கட்ராமன் தனது வாக்குமூலத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி, கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தனது குழந்தையைச் சந்திக்க விடாமல் சுசனா சேத் தடுத்ததாகக் கூறியுள்ளார். மேலும், கடைசியாக டிசம்பர் 10-ஆம் தேதி தனது மகனைச் சந்தித்ததாக அவர் அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய ஒரு வருடமாக பெங்களூரு குடும்பநல நீதிமன்றத்தில் தங்கள் மகனுக்கான காவல் போராட்டம் நடந்து வருவதாகவும், ஆரம்பத்தில், தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே தொலைபேசி மற்றும் வீடியோ தொடர்புக்கு மட்டுமே அனுமதித்த நீதிமன்றம், நவம்பரில், காலை முதல் மாலை வரை குழந்தையை வீட்டில் பார்க்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
கோவா பயணம் பற்றி அறியாத வெங்கட்ராமன்
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி, சுசனா, வெங்கட்ராமனிடம் தங்கள் மகனை பெங்களுருவில் சந்திக்கலாம் கூறியதாகவும், ஆனால் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று காத்திருந்தும் அவர்கள் வரவில்லை என்றும் வழக்கறிஞர் கூறினார். என்டிடிவியிடம் பேசிய மீர், சுசனா, தங்கள் மகனை கோவாவுக்கு அழைத்துச் செல்வது பற்றி வெங்கட்ராமனுக்குத் தெரியாது என்றும், பெங்களுருவில் சந்திக்ககூறிய இடத்தில ஒரு மணி நேரம் காத்திருந்ததாகவும், அவர்கள் வராதபோது போனதும், சூசன்னாவிற்கு அவருக்கு இரண்டு மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் மெசஜ் அனுப்பியதாகவும் கூறினார். அதன்பின்னர் சுசானாவிடம் இருந்து வெங்கட்ராமனுக்கு பதில் வரவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்