Page Loader
தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்! 
இன்று பல நகர்ப்புற வளர்ச்சி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன

தமிழக பட்ஜெட் 2024: அழகூட்டப்படும் கடற்கரைகள், இலவச Wifi, ECR-இல் மேம்பாலங்கள்! 

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2024
02:02 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பல நகர்ப்புற வளர்ச்சி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களும், அவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்: சென்னையின் 42 கிமீ நீளமுள்ள அடையாறு ஆறு, ரூ.1,500 கோடியில் சீரமைக்கப்படும். பூந்தமல்லி- கோடம்பாக்கம் இடையே கட்டுமானத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின், 2025 ஆண்டு டிசம்பரில் தொடங்கி வைப்பார். இதில் தமிழகத்திற்கு கூடுதலாக 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும். மதி இறுக்கம் (Autism) உடையோருக்கான உயர்திறன் மையம் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். தமிழகம் உள்ள புராதன கட்டிடங்கள், ரூ.50 கோடியில் புதுப்பிக்கப்படும்.

சிங்கார சென்னை

சென்னைக்கு வரவுள்ள புதிய திட்டங்கள்

சிங்கார சென்னையின் ஒரு பகுதியாக, தீவுத்திடலில் ஒரு நகர்ப்புற பொதுச் சங்கம், கண்காட்சி அரங்கு, திறந்தவெளி திரையரங்கம் போன்றவை ரூ.104 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. சென்னை புறநகரில் உள்ள கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைகள், 100 கோடி மதிப்பீட்டில் மேலும் அழகுபடுத்தப்படும். சென்னையின் கிழக்கு கடற்கரைச்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைக்க சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற மெட்ரோ மாவட்டங்களில் இலவச Wifi வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்படும். புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலை, 18 மீட்டராகவும், டாக்டர் ராதாகிருணன் சாலை 30.5 மீட்டராகவும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.