பஜாஜ் ஆட்டோ... காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும்?
தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடவிருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். காலாண்டு முடிவு வெளியீட்டைத் தொடர்ந்து அதன் பங்குகள் இன்று காலை ஏற்றத்திலேயே வர்த்தகத்தைத் தொடங்கின. வர்த்தக வாரத்தின் முதல் நாளான நேற்றும் 0.6% ஏற்றத்துடன் ரூ.4,332.10-வில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது பஜாஜ் ஆட்டோ. அதோடு புதிய 52-வார ஏற்றத்தையும் பதிவு செய்திருந்தது. மூன்றாம் காலாண்டில் சிறப்பான முடிவுகளைப் பதிவு செய்திருந்தது பஜாஜ் ஆட்டோ. ஆனால், நான்காம் காலாண்டில் அதன் விற்பனை முந்தைய காலாண்டை விட 12.8% குறைந்திருக்கிறது. உள்நாட்டு விற்பனை 6%-மும், ஏற்றுமதி 21%-மும் குறைந்திருக்கிறது. இவை இன்றைய காலாண்டு முடிவில் எதிரொலித்து, குறைவான காலாண்டு முடிவுகளையே அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலவரிசையைப் பகிரவும்