
அழகிரியின் மகன், துரை தயாநிதி வேலூர் CMC மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுமான துரை தயாநிதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், மூளையின் ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதற்காக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் வேலூர் CMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பிற்காக மேல் சிகிச்சைக்காக அவர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.
துரை தயாநிதி, சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார்.
துரை தயாநிதி, கடந்த ஆண்டு டிசம்பர்-6ஆம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ட்விட்டர் அஞ்சல்
துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதி
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதி #Vellore #DuraiDayanidhi #Hospital #NewsTamil24x7 pic.twitter.com/mAzUxbCyPo
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) March 14, 2024