'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி
செய்தி முன்னோட்டம்
அசாம் மாநிலம், நகோன் மாவட்டத்தில் மொரிகொலாங் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக செயல்பட்டவர் ஜூமொனி ரூபா(30).
இவர் மோசடி வழக்கு ஒன்றில் தனது கணவரை கைது செய்தவர்.
தொடர்ந்து அவர் குற்றவாளிகள் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து 'பெண் சிங்கம்' என்னும் பெயரினை பெற்றார்.
இவர் குற்றவாளிகளை கடுமையாக கையாண்டாலும் அவர்களிடம் மிரட்டி பணம் பறிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் அவரை 'தபாங் போலீஸ்' என்றும் அழைப்பர். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து அவர் தனது பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் மே.,16(நேற்று) அதிகாலை 2.30 மணியளவில் தனது காரில் சஹ்குயா என்னும் கிராமப்பகுதியில் உள்ள சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார்.
விபத்து
தப்பியோடிய லாரி ட்ரைவரை தேடும் போலீசார்
அப்போது வேகமாக அதே சாலையில் வந்த லாரி ஒன்று ரூபாவின் கார் மீது மிக வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ரூபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார்கள்.
அதன் பின்னர் அது ஜூமொனி ரூபா தான் என்று உறுதி செய்துள்ளார்கள்.
மேலும் ரூபா காரில் மோதிய லாரி உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்ததாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீசார் தற்போது தப்பியோடிய லாரி ட்ரைவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் திட்டமிட்ட படுகொலையா? அல்லது விபத்தா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.