பதவியை ராஜினாமா செய்தார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தானில் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, இன்று மாலை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவியை ராஜினாமா செய்தார். நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி சுமார் 104 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. மேலும், சுமார் 67 இடங்களில் காங்கிரஸும், 14 இடங்களில் பிற கட்சிகளும் வெற்றி பெற உள்ளன. இந்நிலையில், காங்கிரஸின் தோல்வியை ஒப்புக்கொண்ட அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் இன்று மாலை சமர்ப்பித்தார்.