Page Loader
அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை

அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர்புடைய 12 இடங்களில் சோதனை

எழுதியவர் Sindhuja SM
Feb 06, 2024
10:18 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்புடைய சிலரின் அலுவலகங்களில் அமலாக்க இயக்குனரகம்(ED) சோதனை நடத்தி வருகிறது. பணமோசடி வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையின் ஒரு பகுதியாக தேசிய தலைநகரில் உள்ள 12 வளாகங்கள் மூடப்பட்டன. கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளரான பிபவ் குமார் மற்றும் முன்னாள் டெல்லி ஜல் போர்டு(டிஜேபி) உறுப்பினர் ஷலப் குமார் ஆகியோரின் இருப்பிடங்கள் உட்பட வேறு சிலரின் இருப்பிடங்களையும் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

டெல்லி 

பணமோசடி வழக்கு விவரங்கள் 

பிபாவ் மற்றும் ஷலாப் தவிர, கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளர் என்.டி.குப்தாவின் வீட்டிலும் ED அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணமோசடி வழக்கு டிஜேபியின் டெண்டர் செயல்பாட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பானது. மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) மற்றும் டெல்லி அரசாங்கத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) ஆகிய இரண்டு வழக்குகளின் அடிப்படையில் டிஜேபியின் டெண்டர் செயல்முறையில் நடந்த முறைகேடுகள் குறித்து ED விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனேவே மணீஷ் சிசோடியா போன்ற பெரும் ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.