LOADING...
தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை
தொடரும் மாணவர்கள் தற்கொலையால் ராஜஸ்தானின் கோட்டா சர்ச்சைகளின் சிக்கி உள்ளது

தொடரும் NEET தற்கொலைகள்: கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை

எழுதியவர் Srinath r
Sep 28, 2023
01:51 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 20 வயதான முகமது தன்வீர், இன்று தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகரம் என அழைக்கப்படும் ராஜஸ்தானின் கோட்டாவில், இந்த ஆண்டில் நடைபெறும் 26வது நீட் பயிற்சி தொடர்புடைய தற்கொலையாகும் இது. கோட்டாவில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு பயமும், தேர்வுகளால் மாணவர்கள் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுவதும் காரணமாக சொல்லப்படுகிறது. தொடரும் மாணவர்கள் தற்கொலைகளை அடுத்து, இரண்டு மாதங்களுக்கு தேர்வுகளை நடத்த வேண்டாம் என பயிற்சி மையங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஒரு வருடமும் லட்சக்கணக்கான மாணவர்கள் கோட்டாவிற்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற வருகின்றனர்