Page Loader
மதுபானக் கொள்கை வழக்கில் மற்றொரு டெல்லி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன் 

மதுபானக் கொள்கை வழக்கில் மற்றொரு டெல்லி அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன் 

எழுதியவர் Sindhuja SM
Mar 30, 2024
10:45 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டை விசாரணைக்கு அமலாக்க இயக்குனரகம் (ED) அழைத்துள்ளது. 2021 இல் புதிய மதுபான கொள்கைக்கு ஒப்புதல் அளித்த அமைச்சர்கள் குழுவில்(GoM) கெலாட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் (ED) தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் இது குறித்து மேலும் தகவல் வெளியானதும் இந்த செய்தி புதுப்பிக்கப்படும்.

டெல்லி 

டெல்லி மதுபான கொள்கை வழக்கு பிரச்சனை 

இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறும், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்(பிஎம்எல்ஏ) கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாகவும் கெலாட் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம்-ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் வியாழன் அன்று கைது செய்யப்பட்டார்.