கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வி அடைய அதிக வாய்ப்பு
2024 மக்களவை தேர்தலில் தமிழக்தில் இருந்துபோட்டியிடும் எந்தெந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை தோற்க வாய்ப்புள்ளதாக ஆக்சிஸ் மை இந்தியா தேர்தல் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரையும், அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரனையும் எதிர்த்து பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோயம்புத்தூர் மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்(திமுக) வேட்பாளர் பி.கணபதி ராஜ்குமார் அமோக வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைமையிலான இண்டியா கூட்டணி வெற்றிபெறும் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று அண்ணாமலை நம்பிக்கை
இதற்கிடையில், இந்த கணிப்பை நிராகரித்த அண்ணாமலை, கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா டுடேயிடம் பேசிய அவர், "ஜூன் 4 அன்று உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்புகிறோம். நாங்கள் அமோகமாக வெற்றி பெற வேண்டும். எங்களுக்கு முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரதமர் மோடி மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்பது தான்" என்று கூறியுள்ளார். கண்டிப்பாக இந்த தொகுதியில் வெற்றி பெற்று விடுவோம் என்று பாஜக நம்பி கொண்டிருக்கும் மக்களவைத் தொகுதிகளில் கோவையும் ஒன்றாகும். இத்தொகுதியில் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக வெற்றி பெற்றது. ஆனால், கடந்த நான்கு தேர்தல்களில் பாஜகவால் இந்த தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை.