அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வு உத்தரவு நிறுத்தி வைப்பதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தின நிலையில், அது நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தேர்வுக் கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில், கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், சிண்டிகேட் ஒப்புதல் பெறும்வரை இது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அதுவரை தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றார். மேலும், இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் தெரிவித்தார்.