பொறியியல் கல்லூரிகள் Autonomous அங்கீகாரம்: விதிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலை.,
தமிழ்நாட்டில் இயங்கும் கிட்டத்தட்ட 446 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் குடையின் கீழ் வருகிறது. அவற்றின், தரத்தை மேற்பார்வையிடுவது, அங்கீகாரம் வழங்குவது, தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளை உருவாக்குவது போன்ற பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தான் செயல்படுத்தி வருகிறது. தற்போதைய கல்வியாண்டு தொடங்கும் முன்னர், இதுதொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக கடந்த மாதம், ஜூன் 20-ஆம் தேதி அண்ணா யுனிவர்சிட்டி சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு புதிய விதிமுறைகள் ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது. அதன்படி, என்ஜினீயரிங் கல்லூரிகள், தன்னாட்சி (autonomous) அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, விண்ணப்பிக்கும் கல்லூரிகளை கண்காணிக்க சில விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன.
விண்ணப்பிக்கும் கல்லூரிகளுக்கு கடுமையாக்கப்படும் விதிகள்
சிண்டிகேட் முடிவின்படி, விண்ணப்பிக்கும் கல்லூரிகளின், மாணவர்கள் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம்(60 சதவீதமாக இருந்தது, 70 சதவீகிதமாக அதிகரிப்பட்டுள்ளது) , கல்லூரி பேராசிரியர்களின் கல்வி அனுபவம்(குறைந்தது 5 ஆண்டுகள்), ஆராய்ச்சி தொடர்பான உள்ளீடுகள் ஆகியவை முக்கிய காரணிகளாக கருதப்படும். Administration வேலைகளுக்கு, நிதி மற்றும் நிர்வாகக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளும் இந்த விதிமுறைகளை முறையே பின்பற்ற வேண்டும். இல்லையேல் அவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 90 கல்லூரிகள் இதுவரை தன்னாட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.