ஆந்திர சட்டமன்ற தேர்தல்:சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி தொடர் முன்னிலை
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அதே நேரத்தில், ஆந்திராவின் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கடந்த மே மாதம் 13-ம் தேதி நடைபெற்ற இந்த சட்டப்பேரவை தேர்தலில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியோ, பாஜக, ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதேபோல, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன. ஆரம்பகட்ட நிலவரப்படி, TDP (தெலுங்கு தேசம் கட்சி) முன்னிலை வகிக்கிறது.
Twitter Post
TDP முன்னிலை
சந்திரபாபு தலைமையிலான கூட்டணி 109 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்கம் முதலே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூட்டணி 90 சதவீதம் முன்னிலை பெற்றது. இதன் தோழமை கட்சிகளான பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன. நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சற்று பின்னடைவை சந்தித்துள்ள நேரத்தில், அக்கட்சியின் சுற்றுலா துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா நகரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.