தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரினார் அஜித் பவார்
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் கட்சி(NCP) பிளவுப்பட்டிற்கும் நிலையில், அக்கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார் NCPயின் மூத்த தலைவர் அஜித் பவார்.
1999ஆம் ஆண்டு சரத் பவாரால் ஆரம்பிக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் பிளவால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த NCP கட்சியின் தலைவர்களான சரத் பவாரும் அஜித் பவாரும் அக்கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் ஆவர்.
அவர்கள் இருவரும் அரசியல் தலைவர்கள் எனபதையும் தாண்டி மிக நெருங்கிய உறவினர்களும் கூட.
இந்நிலையில், சரத் பவாரின் மருமகனான அஜித் பவார், இரண்டு நாட்களுக்கு முன் திடீரென்று ஆளும் பாஜக அரசுடன் இணைந்தார்.
டிஜிவ்
"சின்னம் எங்கும் செல்லாது": சரத் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மொத்தம் இருக்கும் 53 எம்எல்ஏக்களில் குறைந்தபட்சம் 28 எம்எல்ஏக்கள் அஜித்பவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 17 பேர் சரத்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால், பெரும்பானமையான எம்எல்ஏக்கள் தன்னிடம் இருப்பதால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை தனக்கு வழங்க வேண்டும் என்று அஜித் பவார் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன்பிறகு, ஒரு பேரணியில் பேசிய அஜித்பவார், "மற்ற கட்சிகளில் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின் ஓய்வு பெறுகின்றனர். உங்கள் வயது 83, நீங்கள் எப்போதாவது நிறுத்துவீர்களா இல்லையா?"என்று சரத்பவாரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், NCP-கட்சியில் இருந்து சரத்பவாரை தான் நீக்கிவிட்டதாகவும் அஜித்பவார் அறிவித்துள்ளார்.
இதே விஷயத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிலும் அவர் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.