Airshow 2024: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு அதிகரிப்பு
நாளை சென்னை விமான படையினரின் சாகச நிகழ்ச்சி (Airshow) நடைபெறவுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ள இந்த சாகச நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். பல ஆயிரம் மக்கள் இந்த நிகழ்ச்சியை காண வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால் 8 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு, மெரினா கடற்கரை சாலையை சுற்றி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றங்களை கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Twitter Post
நிகழ்ச்சி நிரல் இதுதான்
1932ஆம் ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி நிறுவப்பட்ட இந்திய விமானப்படை, வருடந்தோறும் அக்டோபர் 8-ல் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 92-வது இந்திய விமானப்படை தினம் தேசிய அளவில் விமர்சையாக கொண்டாடப்படும். சென்னை மெரினா கடற்கரையில் "ஏர்ஷோ" எனப்படும் விமான சாகச நிகழ்ச்சி அக்டோபர் 6-இல் நடைபெறும். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் அக்டோபர் 2 முதல் 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அக்டோபர் 6-ஆம் தேதி, காலை 11 மணி முதல் 2 மணி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கான வான்வழி சாகச நிகழ்ச்சிகள் மற்றும் அக்டோபர் 8-ஆம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.