இரண்டரை மணிநேரம் நாட்டையே கதிகலங்க வைத்த திருச்சி ஏர் இந்தியா விமானம்; 141 பயணிகள் உயிருடன் தப்பியது எப்படி?
செய்தி முன்னோட்டம்
சுமார் 141 பயணிகளுடன், திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாயின் சார்ஜாவுக்கு மாலை 5.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
ஆனால், விமானத்தின் அடிப்பாகத்தில் உள்ள சக்கரம் சரியாக திறக்கவில்லை என கண்டறியப்பட்டது. இயந்திர கோளாறால், விமானம் சார்ஜா செல்லாமல், திருச்சியைச் சுற்றி வட்டமடித்து கொண்டே இருந்தது.
சுமார் இரண்டு மணிநேரமாக, திருச்சியை சுற்றி வட்டமடித்து கொண்டே இருந்தது விமானம்.
நாடே அதிர்ச்சியுடன் உறைந்து போய் நின்றிருந்த நேரத்தில், 4255 அடி உயரத்தில் இரண்டரை மணி நேரம் வட்டமடித்த பிறகு, விமானத்தை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தரையில் குவிக்கப்பட்டன. இறுதியாக, 8.15 மணிக்கு, எந்த பிரச்சனையுமின்றி, விமானம் தரையிறங்கியது.
பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்
எரிபொருளை காலி செய்த பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்
விமானத்தை தரையிறக்குவது குறித்து நிபுணர்கள் கூறியதன் படி,"சக்கரத்தில் பிரச்சனை ஏற்பட்டால், முன்பக்க அல்லது பின்பக்க சக்கரத்தை வைத்து தரையிறக்கலாம். ஆனால், எரிபொருளை குறைத்து விமானத்தின் எடையை குறைக்க வேண்டும். இதற்கான இரண்டு வழிகள் உள்ளன: விமானம் வட்டமடிக்கும்போது எரிபொருளை காலி செய்யலாம், அல்லது மக்கள் இல்லாத இடங்களில் கீழே பறந்து எரிபொருளை வெளியேற்றலாம்" என்று கூறுகின்றனர்.
தற்போது அதே போல, ஏர் இந்தியா விமானம், இரண்டரை மணிநேர வட்டமடித்து, எரிபொருளை காலி செய்த பிறகு, பாதுகாப்பாக தரையிறங்கியது; விமானத்தில் இருந்த 141 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அமைச்சர் TRB ராஜாவும் பதிவிட்டிருந்தார்.
embed
Twitter Post
#BREAKING | பத்திரமாக தரையிறங்கியது திருச்சி விமானம்!#SunNews | #Trichy | #AirIndiaExpress pic.twitter.com/ERoSysrnGk— Sun News (@sunnewstamil) October 11, 2024
embed
Twitter Post
Here is #AI613 safely back on the ground 🙏🏾🙏🏾🙏🏾#Trichy https://t.co/eMuxTRT0LZ pic.twitter.com/XKlrabT3xQ— Dr. T R B Rajaa (@TRBRajaa) October 11, 2024