LOADING...
அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி உயிரோடு மீட்பு; மேலும் பலர் உயிரோடு இருக்கலாம் என தகவல்
அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி உயிரோடு மீட்பு

அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி உயிரோடு மீட்பு; மேலும் பலர் உயிரோடு இருக்கலாம் என தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 12, 2025
07:18 pm

செய்தி முன்னோட்டம்

வியாழக்கிழமை (ஜூன் 12) பிற்பகல் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது. முன்னதாக, விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக காவல்துறை கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தற்போது மீட்புக் குழுக்கள் ஒருவரை உயிரோடு மீட்டதாக அகமதாபாத் காவல்துறை ஆணையர் உறுதிப்படுத்தினார். மேலும், மீட்பு நடவடிக்கைகள் தொடரும் போது இன்னும் பலர் உயிரோடு மீட்கப்படலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post