Page Loader
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குகள், ஈரமான உடைகள் அணிந்து எரிந்த உடல்களைத் தூக்கிச் சென்ற மீட்பு குழுவினர்
ஈரமான உடைகள் அணிந்து எரிந்த உடல்களைத் தூக்கிச் சென்ற மீட்பு குழுவினர்

அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குகள், ஈரமான உடைகள் அணிந்து எரிந்த உடல்களைத் தூக்கிச் சென்ற மீட்பு குழுவினர்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 16, 2025
12:25 pm

செய்தி முன்னோட்டம்

அகமதாபாத்தில் கடந்த வாரம் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்ததில் வெடித்து சிதறியது. அப்பகுதியில் 1000 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் நிலவியதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்த வெப்பத்தில் எப்படி மீட்பு படையினர் பணியாற்றினார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் கடுமையான வெப்பம் மற்றும் ஆபத்து இருந்தபோதிலும், விடுதி கட்டிடத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற ஆக்ஸிஜன் முகமூடிகள் மற்றும் ஈரமான துணிகளைப் பயன்படுத்தி மீட்புப் பணியாளர்கள் பணியாற்றினார் என SDRF-ASP ஷீத்தல் குஜார் எடுத்துரைத்தார். ஜூன் 12 அன்று நடந்த இந்த விபத்தில் 240 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் விமானத்தில் பயணித்தவர்கள் தாண்டி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மற்றும் பலர் உயிரிழந்துள்ளார்.

மீட்பு நடவடிக்கை

கடுமையான வெப்பம் மீட்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்தின

"கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை வெளியேற்றுவதில் SDRF குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. நாங்கள் ஆக்ஸிஜன் முகமூடிகளுடன் உள்ளே சென்றோம். பலரின் கைகளும் கால்களும் எரிந்தன. ஆனால் அவர்களை மீட்க, அவர்களின் உடல்களைத் தூக்க ஈரமான துணிகளால் எங்கள் கைகளைக் கட்டினோம். அரை மணி நேரத்திற்குள் 20-30 கூடுதல் ஆம்புலன்ஸ்கள் எங்களுக்கு உதவ வந்தன," என்று அவர் கூறினார். "அந்த நேரத்தில், வெப்பநிலை மிக அதிகமாக இருந்ததால், உள்ளே சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது. எங்கள் குழு கட்டிடத்திற்குள் செல்வதற்கான ஏற்பாடுகளை தீயணைப்புத் துறை செய்தது. விடுதிக்குள் இருந்த பொதுமக்களையும் மாணவர்களையும் நாங்கள் வெளியேற்றினோம். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்...பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்களையும் மீட்டோம்" என்று அவர் மேலும் கூறினார்.