Page Loader
அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து
அசாமில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து

அசாமில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2024
06:08 pm

செய்தி முன்னோட்டம்

வியாழன் அன்று (அக்டோபர் 17) அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் அகர்தலா-மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. மாலை 4 மணியளவில் திப்லாங் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தை வடகிழக்கு எல்லை ரயில்வே உறுதி செய்தது. முதற்கட்ட தகவல்களின்படி, விபத்தின் போது ரயில் இன்ஜின் மற்றும் நான்கு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறின. அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகள் எதுவும் இல்லை என முதற்கட்ட தகவல்களில் தெரிய வந்துள்ளது. தண்டவாளத்தின் நிலை மற்றும் ரயிலின் இயந்திர அமைப்புகளை மதிப்பிடுவதில் கவனம் செலுத்தி, தடம் புரண்டதற்கான மூல காரணத்தை கண்டறிய ரயில்வே அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்றுப் பயண வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

ரயில் விபத்து