
தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்த BSF கான்ஸ்டபிள் பூர்ணம் குமார் ஷா புதன்கிழமை காலை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அமிர்தசரஸின் அட்டாரியில் உள்ள கூட்டு சோதனைச் சாவடியில் காலை 10:30 மணியளவில் இந்த ஒப்படைப்பு நடந்தது, மேலும் நிறுவப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் நடத்தப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது பூர்ணம் குமார் ஷா இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறார்.
போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டின் DGMOக்கள் பேசி முடிவிற்கு வந்ததையடுத்து பாகிஸ்தான் சார்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விவரம்
போர் சூழலில் தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரர்
182வது பட்டாலியனைச் சேர்ந்த பிஎஸ்எஃப் ஜவான் ஷா, ஏப்ரல் 23 அன்று பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் அருகே சர்வதேச எல்லையை தற்செயலாகக் கடந்தபோது பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
ஷா, சீருடையில், தனது சர்வீஸ் துப்பாக்கியை ஏந்தியபடி எல்லை வேலி அருகே பணியில் இருந்தபோது, ஓய்வெடுக்க நிழலான பகுதியை நோக்கி நகர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயல்பாட்டில், அவர் தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார், அங்கு அவர் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.
அந்த சமயத்தில் அவரை மீட்க இரு நாட்டின் ராணுவமும் பேசியும் பலனில்லாமல் போனது.
அதன் பின்னரே இந்திய படைகள் சார்பாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.