
பாஜக தலைமையிலான கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்: பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாக, இன்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று அதிமுகவின் தலையங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி, இந்த முடிவை அறிவித்தார் கட்சியின் தற்போதைய பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி.
2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, அதற்கு பிறகு வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கும் இந்த முடிவு பொருந்தும் எனவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது.
இந்த முடிவிற்கு பின்னால் நடைபெற்ற சம்பவங்களை பற்றி ஒரு சிறு தொகுப்பு.
card 2
அண்ணாவும் அண்ணாமலையும்
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக பா.ஜ.க வின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலைமைச்சரும் தி.மு.கவின் தலைவருமான அண்ணாவை பற்றி அவதூறாக பேசினார் என்பது குற்றசாட்டு.
1956 -இல் அண்ணாதுரை, மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் இந்து மதத்தை அவமதித்து பேசியதாகவும், அதற்காக எழுந்த கண்டனங்களை கண்டு, அவரை ஒளித்து வைத்திருந்ததாகவும், அதன் பிறகு அவர் மன்னிப்பு கோரிய பிறகே அவர் வெளியே வரமுடிந்தது என கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பலத்த எதிர்ப்பை ஈர்த்தது.
அதிமுக கட்சியினர் இடையே கடும் கொந்தளிப்பை இந்த பேச்சு உருவாக்கியது. எனினும் இதற்கு மன்னிப்பு கோர மறுத்துவிட்டார் அண்ணாமலை
card 3
ஜெயலலிதாவும் அண்ணாமலையும்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு ஊழல்வாதி என்பது போல அண்ணாமலை குறிப்பிட்டு பேசியது, அதிமுக கட்சியின் தலைமைக்கு கோவத்தை ஏற்படுத்தியது.
இந்த பேச்சிற்கும் அண்ணாமலை மன்னிப்பு கோரவில்லை. நீதிமன்றத்தால் குற்றவாளி என குறிப்பிடப்பட்டவர், இறந்து விட்டதாலேயே, அவர் நிரபராதி என்றானது என்பது போல அவர் பதில் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவமும் கட்சியின் பிளவுக்கு முக்கிய காரணம்.
இந்த காரணங்களாலேயே அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை அழுத்தமாக எழுந்தது. இருப்பினும், கட்சி தலைமை அதை நிராகரித்தது
card 4
DMK பைல்ஸ் - அண்ணாமலை
அண்ணாமலை, ஆளும் திமுக கட்சியினரின் ஊழலை வெளிகொண்டுவருவேன் என சூளுரைத்து, ஒரு இரும்பு பெட்டி நிறைய ஆதாரங்களை, ஆளுநரிடம் சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்தார்.
அப்போது, ஆளும் கட்சியோ, எதிர் கட்சியோ, ஊழல் வாதிகளை பா.ஜ.க ஆதரிக்காது என கூறி வருகிறார் அண்ணாமலை.
இது கூட்டணி கட்சியான அதிமுகவை நெருட தொடங்கியது எனலாம்.
தங்கள் உட்கட்சி பூசலை சமாளிப்பதா அல்லது கூட்டணி கட்சியின் தலைமையின் அறிக்கையை சமாளிப்பதா என அதிமுகவின் தலைமை தத்தளித்தது.
card 5
தேர்தல் இட ஒதுக்கீடு
ஏற்கனவே உட்கட்சியில் EPS -OPS அணியின் பஞ்சாயத்து நடைபெற்று வரும் நேரத்தில், கட்சியின் ஒரே மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அதே நேரத்தில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில், கூட்டணி கட்சியான பா.ஜ.க 10 இடங்கள் தமிழகத்தில் எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகின.
இது கட்சியின் உறுப்பினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எனக்கூறலாம்.
தங்கள் பலத்தை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் உள்ள இரு முகாம்களும், இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் சற்றே பின்வாங்கியது எனக்கூறலாம்.
ட்விட்டர் அஞ்சல்
அதிமுகவின் அறிக்கை
#JUSTIN | பாஜகவில் இருந்து விலகுவதாக என வெளியிடப்பட்ட அறிக்கையை திருத்தி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக என புதிய அறிக்கையை அதிமுக வெளியிட்டுள்ளது#SunNews | #ADMKvsBJP | #ADMK https://t.co/gXTERGGP7m pic.twitter.com/edOCF5I1jb
— Sun News (@sunnewstamil) September 25, 2023