Page Loader
நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார் - பாஜக'வில் இருந்து விலகல் 
நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார் - பாஜக'வில் இருந்து விலகல்

நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார் - பாஜக'வில் இருந்து விலகல் 

எழுதியவர் Nivetha P
Nov 17, 2023
08:07 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை விஜயசாந்தி கடந்த 1997ம்.,ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார். அதன்பின் 2005ம்.,ஆண்டு அங்கிருந்து விலகி தனிக்கட்சி துவங்கிய அவர், பின்னர் சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சியில் இணைந்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்று 2009ம் ஆண்டு எம்.பி.,பதவி வகித்த விஜயசாந்தி, மீண்டும் சந்திரசேகரராவ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகை விஜயசாந்தி 2020ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி மீண்டும் பாஜக.கட்சியில் இணைந்தார். இந்நிலையில் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தனக்கு பாஜக வாய்ப்பளிக்கும் என்று காத்திருந்த விஜயசாந்திக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவர் பாஜக'வில் இருந்து விலகுவதாக நேற்று(நவ.,16)அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதனிடையே, விஜயசாந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் இன்று(நவ.,17)தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்.

ட்விட்டர் அஞ்சல்

காங்கிரஸில் தன்னை இணைத்து கொண்ட விஜயசாந்தி