10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை கௌரவிக்கிறார் நடிகர் விஜய்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் பல ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
எனினும் அதை கடந்த ஆண்டு வெகு விமர்சியாக செய்தார்.
அதன் பின்னரே அவரின் அரசியல் என்ட்ரி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியானது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் கட்சியை நிறுவிய பின்னர் முதன்முறையாக இந்தாண்டும் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு கான்வென்க்ஷன் ஹாலில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழா மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
விஜய் கல்வி விருது விழா
#JustIn | சென்னையில் த.வெ.க சார்பில் நடைபெறும் கல்வி விருது விழாவிற்கு வருகை தந்தார் விஜய்!#SunNews | #TVKVijay | #Vijay pic.twitter.com/LFGEVGgUIk
— Sun News (@sunnewstamil) June 28, 2024
ட்விட்டர் அஞ்சல்
விஜய் கல்வி விருது விழா
Thalapathy 💙#ThalapathyStudentsMeet2024#Thalapathy50#ThalapathyVijaypic.twitter.com/c0k2nc7Y2X
— just biginner (@just_biginner) June 28, 2024