
10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை சந்திக்கிறார் விஜய்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 பொதுத்தேர்வில் மாவட்டந்தோறும் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து, பாராட்டு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சென்ற ஆண்டு இந்த நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்திக்காட்டினர் அவரின் ரசிகர்கள்.
அதிலும் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லெசும் பரிசாக அளித்தார்.
அதன்பின்னரே அவர் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பு வந்தது.
இந்த சூழலில், இந்த ஆண்டும் அவர் மாணவர்களை சந்திக்க உள்ளார்.
இது சார்ந்த அறிவிப்பு ஒன்று விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய இரண்டு தேதிகளில், இரு கட்டமாக மாணவர்களை சந்திக்கிறார் விஜய்.
ட்விட்டர் அஞ்சல்
மாணவர்களை சந்திக்கிறார் விஜய்
#BREAKING | பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு இரு கட்டங்களாக பாராட்டு விழா நடத்தும் தவெக!#SunNews | #ActorVijay | #VijayMeetsStudents pic.twitter.com/Svl1D8C17x
— Sun News (@sunnewstamil) June 10, 2024