
இன்று ஜனாதிபதியிடம் பத்ம பூஷன் விருதை பெறுகிறார் நடிகர் அஜித்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களை கெளரவிக்கும் நோக்கில், மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.
கலை, அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை மதித்து, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று வகைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவ்விருதுகள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன.
அந்தவகையில், 2025ம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருதுகள் ஜனவரி 25ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் - நடிகர் அஜித் குமார், பரதநாட்டியக் கலைஞரும் நடிகையுமான ஷோபனா சந்திரகுமார், மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி - ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பத்மபூஷன் விருதை பெறுகிறார் அஜித்குமார்!#SunNews | #AjithKumar | #PadmaBhushanAjithKumar | #PadmaBhushan | #PadmaAwards pic.twitter.com/yO1ltzWk85
— Sun News (@sunnewstamil) April 28, 2025
விவரங்கள்
பத்ம விருதுகள் பெறும் மற்ற பிரபலங்கள்
தமிழகத்தை சேர்ந்த கலைஞர் வேலு ஆசான் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவர் தனது குடும்பத்துடன் டெல்லி பயணம் செய்துள்ளார்.
இவர்களை தவிர பத்ம பூஷன் விருதை பெரும் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள்- தெலுங்கு திரையுலக சூப்பர்ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா, கேரளாவை சேர்ந்த இந்தியாவின் ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், கன்னட திரையுலகை சேர்ந்த அனந்த் நாக் உள்ளிட்டவர்கள்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இவர்கள் ஜனாதிபதி கையால் விருதை பெறுவார்கள்.