NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கெஜ்ரிவால் கைது எதிரொலி: இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மியின் 'மாஸ் உண்ணாவிரதம்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    கெஜ்ரிவால் கைது எதிரொலி: இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மியின் 'மாஸ் உண்ணாவிரதம்'
    இந்தியா முழுவதும் மற்றும் பல சர்வதேச நகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளன

    கெஜ்ரிவால் கைது எதிரொலி: இன்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஆம் ஆத்மியின் 'மாஸ் உண்ணாவிரதம்'

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 07, 2024
    10:44 am

    செய்தி முன்னோட்டம்

    அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் மற்றும் பல சர்வதேச நகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

    இன்று காலை 10 மணி முதல் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அலுவலக பணியாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் புது டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர், பஞ்சாபில் கலன் மற்றும் புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் கிராமமான கத்கர் ஆகிய இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று டெல்லி அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

    கெஜ்ரிவாலின் கைதுக்கு பின்னால் இருக்கும் மதுக் கொள்கை வழக்கு புனையப்பட்டது என்றும், அது பாஜகவின் சதி என்றும் ஆம் ஆத்மி கூறுகிறது.

    உண்ணாவிரத போராட்டம்

    சர்வதேச அளவில் உண்ணாவிரத போராட்டம்

    இந்தியா மட்டுமின்றி, அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வாஷிங்டன் டிசி, கனடாவின் டொராண்டோ, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் உள்ளிட்ட இந்தியாவின் 25 நாடுகளின் தலைநகரங்களில் உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப்படும் என்று ஆம் ஆத்மி டெல்லி பிரிவு தலைவர் மேலும் கூறினார்.

    "மோடி அரசின் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும் இந்தியாவிலும், உலகெங்கிலும் வாழும் இந்தியர்களின் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. அவரை (கெஜ்ரிவாலை) கைது செய்ய மத்திய அரசு சதி செய்து ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்திய விதம் அம்பலமாகி வருகிறது" கோபால் ராய் கூறினார்.

    ஏப்ரல் 1ஆம் தேதி, மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    ஆம் ஆத்மி
    போராட்டம்

    சமீபத்திய

    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை
    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்யா

    அரவிந்த் கெஜ்ரிவால்

    'உங்களிடம் சரியான காரணம் இல்லை': அமலாக்க இயக்குநரகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 4-வது முறையாக சம்மன் அமலாக்கத்துறை
    7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு  ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மி

    ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  காங்கிரஸ்
    இன்று தொடங்குகிறது பாஜகவுக்கு எதிரான மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூர்
    விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்  காங்கிரஸ்
    சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு  டெல்லி

    போராட்டம்

    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம் கைது
    சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது கைது
    காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்  தமிழ்நாடு
    முடிவுக்கு வந்தது ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம் ஹாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025