Page Loader
பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா 
பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா

பொள்ளாச்சியில் 9வது சர்வதேச பலூன் திருவிழா 

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2024
10:06 am

செய்தி முன்னோட்டம்

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தும் சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆச்சிபட்டியில் நடைபெறுகிறது. நேற்று, ஜனவரி 12 தொடங்கிய இந்த தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவின் (TNIBF) 9வது பதிப்பு 2024 ஜனவரி 16 வரை நடைபெற உள்ளது. இந்த நான்கு நாள் திருவிழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஹாட் ஏர் பலூன்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களுடன் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த விழா, தினசரி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும். இதற்கான நுழைவு கட்டணம், ரூ.150 முதல் துவங்குகிறது. எனினும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். காலை நேரம் ஹெலிகாப்டர் ரைடுகள் இயக்கப்படுகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

சர்வதேச பலூன் திருவிழா