லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி லடாக் ஆற்றில் விழுந்ததால் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஒரு ஜூனியர் கமிஷன் அதிகாரி(ஜேசிஓ) மற்றும் எட்டு வீரர்கள் அந்த வாகனத்தில் பயணம் செய்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
லேயில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள கியாரி என்ற பகுதியில் நேற்று மாலை 4.45 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு வீரர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் ஒரு பிரிவுடைய தலைமையகம் கிழக்கு லடாக்கில் உள்ள கியாரியில் அமைந்துள்ளது.
டிஜிவ்
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி
விபத்துக்குள்ளான டிரக்கில் 10 வீரர்கள் பயணித்ததாகவும், அதை தவிர அந்த கான்வாயில் 5 வாகனங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குப் பிறகு, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது வந்து காயமடைந்த வீரர்கள் அனைவரையும் இராணுவ மருத்துவ நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.
அதன் பின், எட்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்றொரு வீரரும் உயிரிழந்தார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உயிரிழத்தவர்களின் முன்மாதிரியான சேவையை நாடு என்றும் மறக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.