Page Loader
குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்
8 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.

குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம்

எழுதியவர் Sindhuja SM
Oct 01, 2023
12:02 pm

செய்தி முன்னோட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று(செப் 30) இரண்டு டிரைவர்கள் உட்பட 59 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு தென்காசி மாவட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒரு ஹேர்பின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. அதனால், 8 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். "உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என்று பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியுள்ளது.

டிவ்க்ஜ்

தமிழக் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிதியுதவி

விபத்து நடந்ததும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடி உதவிகளை வழங்கினர். மீட்கப்பட்ட பயணிகளில், 8 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடுமபங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.