
சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்றுஆகஸ்ட் 15) கொண்டாடுகிறது.
அதையொட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சிறிது நேரத்தில் கொடியேற்ற இருக்கிறார்.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று பிரதமர் உரையின் போது பிரதமர் மோடி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7.30 மணிக்கு கொடியை ஏற்றி வைத்து பின்னர் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார்.
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முப்படைத் தலைவர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜடோக்
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
அமெரிக்காவின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமரின் உரையை கேட்க இருக்கிறார்கள்.
பிரதமர்-கிசான் திட்டத்தின் பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களை அரசாங்கம் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைத்துள்ளது.
"ஹர் கர் திரங்கா" திட்டம் , அதாவது தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற மக்களை ஊக்குவிக்கும் திட்டம் இந்த வருடமும் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்றும், தங்களது சமூக ஊடக சுயவிவரப் படத்தை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.