Page Loader
பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்
பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2023
12:45 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, மொத்தம் 7 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தின் அப்போதைய காவல் கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு டிஎஸ்பிகளும் அடங்குவர். கடந்தாண்டு ஜனவரி 5ஆம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி சென்றிருந்தபோது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. அப்போது அங்கே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகளின் முற்றுகையால், பிரதமரின் கான்வாய், மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டது. பாஜக தலைவர்கள், அன்றைய சரண்ஜித் சிங் சன்னி அரசாங்கத்தை குற்றம் சாட்டிய நிலையில், பிரதமரின் பயணத் திட்டங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாக காங்கிரஸ் கூறியது.

card 2

காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட்

இது குறித்து உச்சநீதிமன்றத்தை நாடியது இரு தரப்பும். அதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, பாதுகாப்பு மீறலுக்கு பல மாநில அதிகாரிகளை காரணம் காட்டியது. அதன் தொடர்ச்சியாக, தற்போதைய பகவந்த் மான் தலைமையிலான அரசு, தவறு செய்ததற்காக ஏழு போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. குர்பிந்தர் சிங், அப்போதைய ஃபெரோஸ்பூர் காவல்துறை அதிகாரியாகவும், தற்போது பதிண்டா எஸ்பியாகவும் இருப்பவரும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 6 காவலர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி டிஎஸ்பி-ரேங்க் அதிகாரிகள் பார்சன் சிங், ஜகதீஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் ஜதீந்தர் சிங், பல்விந்தர் சிங், சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்வந்த் சிங் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.