ஹைதராபாத்: குடிபோதையில் 6 நிமிடத்தில் 6 விபத்துகளை ஏற்படுத்திய மென்பொறியாளர்
ஹைதராபாத்தில் ஒருவர் குடிபோதையில் பல விபத்துகளை ஏற்படுத்தியதில், ஒருவர் உயிரிழந்தார் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் படர்லா கிராந்தி குமார், ஞாயிற்றுக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள ஐடி காரிடாரில், ஆறு நிமிட இடைவெளியில் ஆறு விபத்துக்களை ஏற்படுத்தியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான காவல்துறை அறிக்கையில், குமார் மது போதையில் தனது காரினை ஓட்டியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் விபத்து மைண்ட்ஸ்பேஸ் அருகே நள்ளிரவு 12:45 மணிக்கு நடந்தது. கடைசி விபத்து நள்ளிரவு 12:51 மணிக்கு நடந்ததுள்ளது. போதையில் இருந்த குமார், மெஹிதிப்பட்டினம் சாலை வழியாக நிஜாம்பேட்டைக்கு சென்றபோது, மூன்று பைக்குகள், கார், ஆட்டோ மற்றும் பாதசாரிகள் மீது மோதியுள்ளார்.
வண்டியை ஒட்டுமுன்னர் தரப்பட்ட அறிவுரையை புறக்கணித்தார் குமார்
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா படி, குமார் கார் விபத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு ஒரு உள்ளூர் பாரில் நான்கு மணி நேரம் குடித்திருந்தார். மது அருந்தியிருந்ததால் வண்டியை ஓட்ட வேண்டாமென பார் ஊழியர்களின் அறிவுரை தந்தபோதிலும், குமார், தான் ஓட்டும் திறன் கொண்டவர் என்று அவர்களுக்கு உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். குடிபோதையில் அவர் ஏற்படுத்திய விபத்துகள் காரணமாக அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.