சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து 56 இணை பேராசிரியர்கள் பணிநீக்கம்
செய்தி முன்னோட்டம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்போதைய முதல்வர்.,ஜெயலலிதா தலைமையிலான அரசு இந்த பல்கலைக்கழகத்தினை முழுவதுமாக அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
அதன்படி பல்கலைக்கழகத்தினை சீர்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முதன்மை செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
அவர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் துறைகளை ஆய்வு செய்ததில், அதில் பணிபுரியும் இணை பேராசிரியர்கள் தேவையான கல்வி தகுதியில்லாமல் பணியாற்றி வருவது தெரியவந்தது.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் அப்போது பல்கலைக்கழக நிர்வாகம், துணைவேந்தர் கட்டுப்பாட்டிற்கு சென்றதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தணிக்கைக்குழு அண்மையில், பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தேவையான கல்வி தகுதியில்லாமல் 56 இணை-பேராசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.
குழு
பிஎச்டி முடிக்காமல் பணியாற்றி வந்தது கண்டறியப்பட்டது
இதனை தொடர்ந்து, உடனடியாக உயர்கல்வித்துறை அந்த 56 இணை பேராசிரியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், வேளாண்மை மற்றும் மேலாண்மை துறையில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
அதேபோல் இவர்கள் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு முடித்துவிட்டு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், இளநிலை பட்டபடிப்பினை முடித்து பேராசிரியர் பணியில் இருந்து வந்துள்ளனர் என்றும், பிஹெச்டி முடிக்காமல் பணியாற்றி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட இணை பேராசிரியர்கள் கூறுகையில், "மொத்தம் 80க்கும் மேற்பட்டோர் தேவையான தகுதியில்லாமல் பணியாற்றுவதாக தெரியவந்தது. ஆனால் அவர்களுள் சிலர் தங்களுக்கு பணி உயர்வு ஏதும் வேண்டாம். இப்படியே தொடர்கிறோம் என்று கடிதம் கொடுத்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் தங்கள் பணியில் தொடர்கிறார்கள்" என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.