Page Loader
பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம்

பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் உத்தர பிரதேசத்தில் 5 பேர் பலி, 10 பேர் காயம்

எழுதியவர் Sindhuja SM
Mar 11, 2024
04:55 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் மாவட்டத்தில் இன்று ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் குறைந்தது 5 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். அந்த பேருந்தின் மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காசிபூரில் உள்ள மர்தா நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மஹாஹர் என்ற நகருக்குச் சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

உத்தர பிரதேசத்தில் தீ விபத்து