Page Loader
பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் 
பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் 

எழுதியவர் Nivetha P
Oct 12, 2023
07:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலத்தில் அவ்வப்போது ஐஏஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கமாகியுள்ளது. அதன்படி இன்று(அக்.,12)பள்ளிக்கல்வித்துறை செயலர் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக குமாரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முந்தைய பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா ஐஏஎஸ் தமிழக சுற்றுலாத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இவர்களையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மை செயலாளராக இருந்த தீரஜ் குமார், தகவல் தொழில்நுட்பம்-டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தொழில் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பணியிடமாற்றம்