டெல்லி உட்பட வட இந்திய பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்
கிழக்கு ஜம்மு காஷ்மீரில் இன்று(ஜூன் 13) பிற்பகல் 1:30 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. பிற்பகல் 1:30 மணிக்குப் பிறகு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில நொடிகள் நீடித்ததாக ட்விட்டர் வாசிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வாரில் இருந்து தென்கிழக்கே 30 கிமீ தொலைவில் 5.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்(EMSC) தெரிவித்துள்ளது. 60 கிமீ ஆழத்தில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையம் பஞ்சாபில் உள்ள பதன்கோட்டில் இருந்து வடக்கே 99 கிமீ தொலைவில் பதிவாகி இருந்ததாக EMSC தெரிவித்திருக்கிறது.