Page Loader
புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா
புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்

புதுச்சேரி மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 33% மகளிர் இடஒதுக்கீடு - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா

எழுதியவர் Nivetha P
Dec 13, 2023
11:53 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசியலமைப்பு சட்டம் 106ன் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இந்த மசோதாவிற்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததன் பேரில், இந்த மசோதா சட்டமாக மாறியது. இந்நிலையில் தற்போது யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் இந்த மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தினை கொண்டுவரும் விதமாக மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

நிறைவேற்றம் 

நன்றி தெரிவித்தார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் 

ஆனால் 106-ன் சட்டத்திருத்தப்படி நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்ற பின்னர் நடக்கும் மக்களவை மற்றும் பேரவைத்தொகுதி மறுவரையறைக்கு பிறகே இந்த இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வருமாம். இதன் காரணமாக நாடு முழுவதும் மகளிருக்கான இந்த இடஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வருவதற்கு சற்று காலமெடுக்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனிடையே, புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் அவர், நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உரிய ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவர், இந்த இடஒதுக்கீடு பாரத பெண்களின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.