Page Loader
சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை
கோவை கார் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளி கோவை அரபிக் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார்.

சென்னை, கோவை, தென்காசியில் பயங்கரவாத பயிற்சி மையங்களா? NIA அதிரடி சோதனை

எழுதியவர் Sindhuja SM
Sep 16, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை(NIA) கோவை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சந்தேகத்திற்கிடமான இடங்களில் இன்று காலை முதல் சோதனையைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அமைந்திருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட்க்கு(ISIS) சொந்தமான பயிற்சி மையங்களை தகர்க்க NIA முயற்சித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 6 ஆம் தேதி, ISIS திருச்சூர் கிளையின் தப்பியோடிய தலைவரான சையத் நபீல் அகமதுவை சென்னையில் வைத்து NIA கைது செய்தது. பயங்கரவாத எதிர்ப்பு ஏஜென்சியான NIAவின் ஃப்யூஜிடிவ் டிராக்கிங் டீம் மூலம் அவர் பிடிபட்டார். அகமது, பல வாரங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகளிடம் இருந்து தப்பித்துக் கொண்டிருந்தார். போலி பாஸ்ப்போர்ட்டை பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதுதான் அவரது நோக்கமாக இருந்தது.

தகவ்க்

30 இடங்களில் NIA சோதனையைத் தொடங்கியுள்ளது

கடந்த வருடம், கோவை கார் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளி கோவை அரபிக் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். மேலும், அந்த கல்லூரில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக NIAவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 30 இடங்களில் NIA சோதனையைத் தொடங்கியுள்ளது. அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் வீடுகளிலும் NIA சோதனை நடத்தி வருகிறது. சோதனை நடத்தப்படும் இடங்கள்: கோவை- உக்கடம், டவுன்ஹால், போத்தனூர் தென்காசி- கடையநல்லூர் சென்னை- திருவிக நகர், நீலாங்கரை உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.