Page Loader
புதுவையில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலி; கழிவறையிலிருந்து கசிந்ததாக தகவல்
விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்

புதுவையில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலி; கழிவறையிலிருந்து கசிந்ததாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 11, 2024
11:58 am

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரியில் வீட்டு கழிவறை மூலமாக பரவிய விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியில் கழிவறைக்குச் சென்ற மூதாட்டி ஒருவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார். சத்தம்கேட்டு அவரை தூக்குவதற்காக சென்ற அவரது மகளும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்ட மூதாட்டியின் பேத்தி, இருவரையும் காப்பாற்ற கழிவறைக்கு சென்றபோது அவரும் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு மூவரையும் அழைத்து சென்ற அக்கம்பக்கத்தினரிடம், பாட்டியும், மகளும் விஷவாயு தாக்கி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் பேத்தியை ICU-ல் அனுமதித்திருந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்து உள்ளார். இவர்கள் அல்லாது மேலும் இரண்டு பெண்கள் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

விஷவாயு தாக்கி மூவர் பலி