ஜெய்ப்பூர்: அரை மணிநேரத்தில் தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று காலை அரை மணிநேரத்தில் அடுத்துதடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4:10 மணியளவில், ரிக்டர் ஸ்கேலில் 4.4 என பதிவான முதல் நிலநடுக்கத்தை தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கம் 4:22 மணிக்கு நடந்தது. அது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானதாக செய்திகள் கூறுகின்றன. தொடர்ந்து மூன்றாவது நிலநடுக்கம், அடுத்த மூன்று நிமிடத்தில், 4:25 மணிக்கு ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவும், 3.4 என பதிவானதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கங்கள் அனைத்தையும், ஜெய்ப்பூர் நகரத்தின் அடியில், 10கிமீ ஆழத்தில் நிகழ்ந்துள்ளது எனவும் தெரிகிறது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எந்த பொருட்சேதமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. முன்னதாக வியாழக்கிழமை அதிகாலை மிசோரமிலும், இதே போன்றொதொரு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.