Page Loader
பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி 
ஆகஸ்ட் 04 அன்று பாதுகாப்புப் படையினரால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன

பயங்கரவாத தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி 

எழுதியவர் Sindhuja SM
Aug 05, 2023
09:31 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நேற்று(ஆகஸ்ட் 4) நடந்த என்கவுன்டரில் குறைந்தது மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஹலன் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, என்கவுன்டரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களிடம் இருந்து 4 ஏகே-47 துப்பாக்கிகளை பயங்கரவாதி ஒருவர் பறித்துச் சென்றார். இந்நிலையில், சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேக்

'மூன்று வீரர்கள் காயம் அடைந்து, பின்னர் உயிரிழந்தனர்': இராணுவம் 

"ஆபரேஷன் ஹலன் குல்கம். குல்காமில் உள்ள ஹலானின் உயரமான பகுதிகளில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து, ஆகஸ்ட் 04 அன்று பாதுகாப்புப் படையினரால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பயங்கரவாதிகளுடன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று வீரர்கள் காயம் அடைந்து பின்னர் உயிரிழந்தனர். தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. "என்று ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட சினார் கார்ப்ஸ் இராணுவம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. "பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. துப்பாக்கிச் சண்டையில், மூன்று பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். பின், அவர்கள் சிகிச்சையின் போது இறந்தனர்." என்று ஒரு இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.