29ம் தவணை தேர்தல் பத்திரங்களை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது SBI
இந்தியாவில் 29ம் தவணை Electoral Bonds விற்பனையை, நாளை தொடங்குகிறது எஸ்பிஐ வங்கி. நாளை (அக்டோபர்-4) முதல் 10 நாட்களுக்கு அதாவது அக்டோடர்-3ம் தேதி வரை இந்தத் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்யவிருக்கிறது எஸ்பிஐ. தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? அரசியல் கட்சிகள் முன்பு பணமாக பெற்று வந்த நன்கொடையை தற்போது பத்திர வடிவில் பெறுகின்றன. இதனால் மக்களுக்கு எந்த லாபமும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951,பிரிவு 29A கீழ் பதிவு செய்யப்பட்டு, கடந்த பொதுத்தேர்தலில் 1%-தத்திற்கும் குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள், பத்திர வடிவிலான இந்த நன்கொடையை பெற முடியும். 2017ம் ஆண்டு பாஜக அரசு தான் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இந்தத் தேர்தல் பத்திரங்களை யார் வாங்கலாம்?
எஸ்பிஐ வெளியிடும் இந்தத் தேர்தல் பத்திரங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இந்தியக் குடிமகனாக இருக்கும் எவரும், இந்திய நிறுவனம் எதுவும் இந்தத் தேர்தல் பத்திரங்களை வாங்க முடியும். ரூ.1000, ரூ.10,000, ரூ,1,00,000, ரூ.10,00,000 மற்றும் ரூ.1,00,00,000 ஆகிய முகமதிப்பு கொண்ட பத்திரங்களை, தேர்தல் பத்திரங்களாக நாம் பெற முடியும். எஸ்பிஐ பட்டியலிட்டிருக்கும் குறிப்பிட்ட 29 வங்கிக் கிளைகளில் மட்டுமே, இந்த தேர்தல் பத்திரங்களை ஒருவர் வாங்க முடியும். இந்தத் தேர்தல் பத்திரங்கள் ஆயுட்காலம் வெறும் 15 நாட்கள் மட்டுமே. 15 நாட்களுக்குகள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள், தாங்கள் பெற்ற தேர்தல் பத்திரங்களை வங்கிக் கிளைகளில் கொடுத்து தங்களுடைய வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக் கொள்ள முடியும்.
எதற்காக தேர்தல் பத்திரங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது பாஜக அரசு?
தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, அரசியல் கட்சிகள் நன்கொடைகளைப் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ரூ.2000-க்கும் மேல் நன்கொடை அளிப்பவர்களின் தகவல்கள் வழகப்பட வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகள் பெற்ற லாபத்தில் 7.5% வரை மட்டுமே நன்கொடை அளிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இந்த தேர்தல் பத்திர முறையில் அப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. தன்னுடைய பெயரைக் குறிப்பிடாமல் ஒருவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பத்திர வடிவில் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை அளிக்க முடியும். இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரான பா.சிதம்பரம் இந்தத் தேர்தல் பத்திரங்கள் குறித்து தான் பதிவிட்ட எக்ஸ் பதிவில், இதனை சட்டப்பூர்வமான லஞ்சம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்தல் பத்திரங்கள் குறித்த பா.சிதம்பரத்தின் எக்ஸ் பதிவு:
The 28th tranche of Electoral Bonds will open on October 4. It will be a golden harvest for the BJP Going by the past records, 90 per cent of the so-called anonymous donations will go to the BJP The crony capitalists will open their cheque books to write out their 'tribute' to...— P. Chidambaram (@PChidambaram_IN) September 30, 2023